தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள அனிஷா வீட்டில் நடைபெற்றது.
இதில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
விஷாலுடன் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்பபட உள்ளது.
தமிழ் சினிமாவில் சமீபத்தில்தான் விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யாவின் திருமணம் நடைபெற்றது. அதற்கடுத்து விஷாலின் திருமணம் நடைபெற உள்ளது.
தன்னுடைய திருமணத்தை நடிகர் சங்க புதிய கட்டிடத்தில்தான் நடத்துவேன் என விஷால் ஏற்கெனவே சொல்லி வருகிறார். அந்தக் கட்டிடமே முடிவடைய மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள். அதன்பின் திருமணம் நடக்குமா அல்லது அதற்கு முன்னதாகவே விஷால் திருமணம் செய்து கொள்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.