மீண்டும் ஆரம்பமான ‘எஸ்கே 14’

24 எஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 14வது படம் என குறிப்பிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டே ஆரம்பமானது.

படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த வருடம் மார்ச் மாதம் வரை நடைபெற்றது. அதன் பின் சில சிக்கல்களால் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவில்லை. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.

படத்திற்கான அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிட்டு படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள். சயின்ஸ் பிக்ஷன் படமாக இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். 

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘டாக்டர்ஸ்’ படத்திற்குப் பிறகு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் பெயரை அறிவிக்க உள்ளார்கள்.

Read Previous

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

Read Next

கஷ்டப்படும் அஜித் தயாரிப்பாளர்…

Most Popular