‘சிறை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும்  டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துளளது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மின்னு வட்டம் பூச்சி” பாடல் இன்று சென்னை, விஐடி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில்  படக்குழுவினர் கலந்து கொள்ள, இப்பட பாடல் வெளியிட்டப்பட்டது.  

‘மின்னும் வட்டம் பூச்சி’ என்ற இந்த இரண்டாவது பாடலை, கார்த்திக் நேத்தா எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையில், யுவன்ஷங்கர் ராஜா மற்றும் பத்மஜா சீனிவாசன் பாடியிருக்கிறார்கள்.

‘டாணாக்காரன்’  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  அவரது ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

 

Read Previous

சுதீப் நடிக்கும் ‘மார்க்’ படத்தின் படத்திரிகையாளர் சந்திப்பு

Read Next

ஃப்ரேம் & ஃபேம் – திரைப்பட விருது விழா – பத்திரிகையாளர் சந்திப்பு!