ஜனவரி 26-ம் தேதி ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, லால், சத்யராஜ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன.
தற்போது இந்தப் படத்தின் வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு உள்ளது
.இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜனவரி 26-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
Tags: rj balaji singapore saloon