‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘கண்ணூர் ஸ்குவாட்’. மம்மூட்டி தயாரித்திருந்த இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியானது. திரையரங்கில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பாணியிலான படம் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓடிடி வெளியீட்டிலும் இந்தப் படம் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
2023-ம் ஆண்டு அதிகம் பேர் பார்த்த திரைப்பட பட்டியலை வெளியிட்டுள்ளது ஹாட்ஸ்டார் நிறுவனம்.
இதில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது ‘கண்ணூர் ஸ்குவாட்’.தமிழில் ‘குட் நைட்’, ‘ரன் பேபி ரன்’, ‘செம்பி’ மற்றும் ‘பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.