’அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களுக்குச் சிக்கல்

‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ படங்களுக்கு தெலுங்கு வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் வெளியீடாக ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’, ‘மிஷன் சாப்டர் 1’ உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகவுள்ளது.

தற்போது இதன் தெலுங்கு வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் பொங்கல் வெளியீடாக ‘குண்டூர்காரம்’, ‘ஹனுமான்’, ‘சைந்தவ்’ மற்றும் ‘நா சாமி ரங்கா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. 

ரவி தேஜா நடித்துள்ள ‘ஈகிள்’ படமும் வெளியாக இருந்தது. ஆனால், திரையரங்குகள் பற்றாக்குறையால் பிப்ரவரி 9-ம் தேதி வெளியீட்டுக்கு ஒத்திவைத்துவிட்டது படக்குழு.

தெலுங்கு படங்களுக்கே திரையரங்குகள் பற்றாக்குறையாக இருப்பதால், தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிங்கிற்கு திரையரங்குகள் இல்லை என்று தெரிவித்துவிட்டார்கள். 

இதனால், ஜனவரி 12-ம் தேதி தெலுங்கில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் வெளியாகாது. புதிய தேதி என்ன என்பது விரைவில் தெரியவரும்.

தெலுங்கில் திட்டமிட்டப்படி வெளியாகாத காரணத்தால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Read Previous

யஷுக்கு நாயகியாக கரீனா கபூர்

Read Next

ஓடிடியில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய ‘கண்ணூர் ஸ்குவாட்’

Most Popular