டிவைன் புரொடக்ஷன் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், பிரேதீப் குமார் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், ஸ்ரீராம், சாரா நடிப்பில் டிசம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள படம் ‘சில்லுக்கருப்பட்டி’.
ஒரே படத்தில் நான்கு விதமான வயதுப் பருவம் உள்ள காதல் கதைகளைக் கொண்டுள்ள படம் இது.
இப்படத்தைப் பார்த்த நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவின் தான் பார்த்த ஒரு நேர்த்தியான காதல் திரைப்படம் என்றும் இது போன்று காதலை யாரும் இவ்வளவு கண்ணியமாக காட்சி அமைத்ததில்லை என்றும் இயக்குனரைப் பாராட்டி உள்ளார்.
சென்னையில் இந்த வருடம் நடந்த 17வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ‘சில்லுக்கருப்பட்டி’, இரண்டாவது சிறந்த படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.
படம் பார்த்த அனைவரும், நான்கு கதைகளையும் தங்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த விதத்தில் படம் இருந்ததாக பாராட்டியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்த்த அனைத்து பத்திரிகையாளர்களும் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
2டி என்டர்டெயின்மென்ட் சூர்யா வழங்கும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சிக்னேச்சர்ஸ் சார்பாக சக்திவேலன் டிசம்பர் 27ம் தேதி வெளியிடுகிறார்.