தர்பார் – ஜனவரி 9 ரிலீஸ் ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தர்பார்’.

இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி 9ம் தேதியன்றே வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

படத்தை அமெரிக்காவில் வெளியிடும் பிரைம் மீடியா என்ற நிறுவனம் அவர்களுடைய டிவிட்டர் தளத்தில் ஜனவரி 8ம் தேதியன்று அமெரிக்கா முழுவதும் பிரிமீயர் காட்சிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

பொதுவாக வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் படத்தின் பிரிமீயர் காட்சிகளை அமெரிக்காவில் நடத்துவார்கள். அதனால், படம் உலகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Read Previous

பஞ்சராக்ஷரம் – டிரைலர் 2

Read Next

சில்லுக்கருப்பட்டி – புதிய அனுபவத்தைத் தரும் சினிமா

Most Popular