சசிகுமாருக்கு நாயகியாகும் கன்னட நடிகை

சசிகுமாருக்கு நாயகியாக கன்னட நடிகை சாய்த்ரா அச்சர் நடித்து வருகிறார்.

‘ஜப்பான்’ படத்திற்கு பிறகு, பல்வேறு நடிகர்களிடம் தனது அடுத்த படத்துக்கான கதையினை கூறி வந்தார் இயக்குநர் ராஜுமுருகன். இறுதியாக இதில் நடிக்க சசிகுமார் சம்மதம் தெரிவித்தார். ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளை சுற்றி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை ஒரே கட்டமாகவும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதில் நாயகியாக கன்னட நடிகை சாய்த்ரா அச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். கன்னடத்தில் வெளியான ‘டோபி’ உள்ளிட்ட பல்வேறு முன்னணி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சாய்த்ரா அச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

ரத்னசிவா இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்

Read Next

பூபால நடேசன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ’கான்ஸ்டபிள் நந்தன்’

Most Popular