ரத்னசிவா இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.
’றெக்க’, ‘சீறு’ மற்றும் ‘வா டீல்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்ன சிவா. இவருடைய படங்கள் அனைத்துமே கமர்ஷியல் படங்களாக இருக்கும். சில மாதங்களாக தனது அடுத்த படத்தின் கதையினை பல்வேறு நாயகர்களிடம் தெரிவித்து வந்தார்.
இறுதியாக இதில் நாயகனாக நடிக்க ஹரிஷ் கல்யாண் சம்மதம் தெரிவித்துள்ளார். வெவ்வேறு கதைகளங்களில் தன்னை நிரூபித்து வரும் ஹரிஷ் கல்யாண், கமர்ஷியல் கதையிலும் தன்னை நிரூபிக்க உள்ளார். தற்போது ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ரத்ன சிவா – ஹரிஷ் கல்யாண் கூட்டணி படத்தினை தேடு ஐ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனத்துடன் மேலும் ஒரு நிறுவனம் தயாரிப்பில் இணையும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.