என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை: நடந்தது என்ன?

’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணம் வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

2021-ம் ஆண்டு சந்தோஷ் நாராயணம் தயாரிப்பில் வெளியான படம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இதில் தீ மற்றும் அறிவு இருவரும் நடித்திருந்தனர். இந்தப் பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இசை தளங்கள் அனைத்திலுமே கொண்டாடப்பட்டது.

தற்போது இந்தப் பாடல் 3 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததே. அனைத்து இசை தளங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பில்லியன் கணக்கில் பார்வைகளை கடந்துள்ளது.

இதுநாள் வரை இந்தப் பாடல் மூலம் எங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு பைசா கூட இல்லை என்பதே உண்மை. சம்பந்தப்பட்ட நிறுவத்தினை தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்த அனுபவத்தால் சொந்தமாக ஸ்டூடியோ தொடங்கவுள்ளேன். இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும் அந்த இசை நிறுவனத்தின் யூடியூப் சேனலுக்கே செல்கிறது” என்று கூறினார்.

இந்தப் பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சை உருவாக்கியது. ஏனென்றால் ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் MAAJJA என்ற யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த யூடியூப் தளத்தினை அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதில் அவருக்கும் பங்குத்தொகை இருக்கும் என்று பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் “தமிழ் பாடல்களை உலகளவில் எடுத்துச் செல்வதற்காக, யாழ் நிறுவனத்துக்கு ஒரு வழிகாட்டியாகவே இருந்தேன்.

ஏனென்றால் அவர்களுடைய எண்ணம் சிறப்பாக இருந்தது. என்னை வைத்து சில விளம்பரங்கள் மற்றும் தயாரித்த பாடல் ஆகியவை வெளியானவுடன் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அந்த நிறுவனத்தில் நான் பங்குதாரராக இல்லை. தான் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அந்த நிறுவனத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பே நீக்கிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தனது பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் சம்பந்தப்பட்டதில்லை என்பதை தெரிவிக்கும் நோக்கில் சந்தோஷ் நாராயணன் “’என்ஜாய் எஞ்சாமி’ பிரச்சினையில் எனக்கு பக்கபலமாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருந்தார். இந்த விஷயத்தில் அவரையும் ஏமாற்றி இருக்கிறார்கள். பல பொய் வாக்குறுதிகளை கூறியிருக்கிறார்கள்.

இ-மெயில்கள் மூலம் மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை பா.ரஞ்சித் மற்றும் அறிவு ஆகியோருடன் இணைந்து ஆய்வு செய்வேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் மூலம் உருவாகியுள்ள இந்தச் சர்ச்சை விரைவில் முடியாது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

Read Previous

மகளிர் தினத்தில் கார்டியன் வெளியாவது மகிழ்ச்சி – ஹன்சிகா

Read Next

ரஜினி செய்த மாபெரும் உதவி: லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி

Most Popular