ரஜினி செய்த மாபெரும் உதவி: லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி

ரஜினி செய்த உதவியால் மட்டுமே மனைவி உயிருடன் இருப்பதாக லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன் நடித்த நடிகர்கள் கஷ்டப்படும் போது, பல்வேறு உதவிகள் செய்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால், எதையுமே விளம்பரப்படுத்தியதில்லை. உதவி பெற்ற நடிகர்கள் கூறும் போது மட்டுமே, அவை தெரியவரும்.

அந்தவகையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பின் போது ரஜினி தனக்கு செய்த உதவியை பேட்டியொன்றில் நிகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் லிவிங்ஸ்டன். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ரஜினி சார் என் மனைவிக்க்குச் செய்த உதவியை மறக்கவே முடியாது. சமீபத்தில் மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்தேன். ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். அப்போது ’லால் சலாம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அங்குள்ள உதவி இயக்குநர்களிடம் இந்த விஷயத்தைக் கூறியிருந்தேன்.

ஒரு நாள் ரஜினி சார் அழைத்து, உன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விபட்டேன். எவ்வளவு செலவாகும் என்று கேட்டு, 15 லட்ச ரூபாய் கையில் கொடுத்தார். இன்றைக்கு என் மனைவி உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் ரஜினி சார் தான்.

ஏற்கனவே நிறைய கடன்கள் இருப்பதால், பணத்தை வாங்குவதற்கு தயங்கினேன். நான் ஒரு சகோதரன் மாதிரி, சகோதரன் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டாயா என்று சொல்லிக் கொடுத்தார். இன்னும் பணம் வேண்டுமானாலும் கேள் எனவும் தெரிவித்தார்”

இவ்வாறு லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

லிவிங்ஸ்டன் பேசி இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Read Previous

என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை: நடந்தது என்ன?

Read Next

ராம்சரணுடன் இணைந்த ஜான்வி கபூர்