சாந்தகுமார் இயக்கத்தில் விக்ரம்?

சாந்தகுமார் இயக்கத்தில் விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ள படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படங்களுக்குப் பிறகு, எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விக்ரம். ஆனால், பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுள்ளார். இதில் சாந்தகுமார் கூறிய கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தற்போது இதன் பட்ஜெட், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களின் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

இன்னும் அதிகாரபூர்வமாக இருவரும் ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும், ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் திரையுலகினர்.

Read Previous

பெண்கள் மீதான திணிப்பை தான் “ரகு தாத்தா” பேசும் – கீர்த்தி சுரேஷ்

Read Next

கூலி’ அப்டேட்: செளபின் ஷாகீர் ஒப்பந்தம்