மீண்டும் விஜய்க்கு நாயகியாக சமந்தா ஒப்பந்தம்

மீண்டும் விஜய்க்கு நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் விஜய். இதற்கான கதை விவாதம் முடிந்து, விஜய்யும் கேட்டு ஒ.கே செய்துவிட்டார். சமீபத்தில் தனது இணை இயக்குநர்களுடன் கேரளாவுக்கு சென்று திரைக்கதை உருவாக்கும் பணிகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார் ஹெச்.வினோத்.

இந்தப் படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டன. ஆனால், ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.

விஜய் – சமந்தா – ஹெச்.வினோத் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, ‘கோட்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது. இப்போது படப்பிடிப்புக்கான ஷெட்டியூல் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

Read Previous

’கூலி’ படப்பிடிப்பு திட்டங்கள்

Read Next

’சலார் 2’ Vs ‘டிராகன்’: தயாரிப்பாளர்களுக்குள் மறைமுக மோதல்

Most Popular