நடிகராகும் அடுத்த இசையமைப்பாளர் சாம் டி ராஜ்

ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாம் டி ராஜ் நடிகராகிறார்.

‘வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், ‘கால் டாக்ஸி’ படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்பட மாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சரண் சண்முகம்  மேற்கொள்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் ஆகியோரிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது

Read Previous

விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் ‘ஏலே’

Read Next

நடிகராகும் அடுத்த இயக்குனர் பிரபு சாலமன்