தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 51-வது படமாகும். இந்தப் படத்தில் முதன் முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ராஷ்மிகா.
’அனிமல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தி யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் தனுஷுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் ராஷ்மிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“தனுஷ் சாருடன் இணைந்து பணிபுரிய ஆவலாக இருக்கிறேன். எனது காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தான் தொடங்கவிருக்கிறது. தனுஷ் சார் மிகச்சிறந்த நடிகர்.
அப்படிப்பட்ட நடிகருடன் இணைந்து நடிக்கும் போது, நானும் சிறப்பாக நடித்தே ஆக வேண்டும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதன் மூலம் எனது நடிப்பை இன்னும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
சேகர் கம்முலா படத்தின் கதையை கூறிய உடனேயே, இந்தக் கதையில் நான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.