ஓடிடி விற்பனையில் அசாத்திய சாதனை நிகழ்த்தியுள்ளது ‘புஷ்பா 2’.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனால் இரண்டாம் பாகத்தின் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. தற்போது இதன் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 250 கோடிக்கு கைப்பற்றி இருக்கிறது. இது படத்தின் வெற்றியைப் பொறுத்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
எப்படியென்றால், படம் வெற்றியோ, தோல்வியோ அனைத்து மொழி ஓடிடி உரிமை 250 கோடி என்று தெரிவித்துள்ளார்கள். படம் வெற்றியடைந்தால் அந்த தொகை 300 கோடி வரை அதிகரிக்கும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இது இந்திய சினிமாவில் மாபெரும் சாதனையாகும். இந்த விலைக்கு ஓடிடி உரிமை விற்பனையாகி இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘புஷ்பா 2’ படத்துக்கு முன்பாக, ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் தான் சுமார் 170 கோடிக்கு ஓடிடி உரிமைகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.