புறநானூறு’ கூட்டணி முடிவானது: ஒப்பந்தம் கையெழுத்து

17 Jul 2024

‘புறநானூறு’ கூட்டணி முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்க அறிவிக்கப்பட்ட படம் ‘புறநானூறு’. 2டி நிறுவனம் தயாரிப்பதாக தொடங்கப்பட்ட இந்தப் படம் கைவிடப்பட்டது. சூர்யா மற்றும் சுதா கொங்காரா இருவருமே சில மாதங்கள் தேவைப்படுவதால் இப்போதைக்கு இல்லை என்று கூட்டாக அறிவித்துவிட்டார்கள்.

இதனால் ‘புறநானூறு’ படத்தில் நடிக்கப் போவது யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. பல்வேறு நடிகர்களும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், ‘புறநானூறு’ பொருட்செலவு அதிகம் என்பதால் தயக்கம் காட்டினார்கள்.

இறுதியாக சிவகார்த்திகேயன் நடிக்க ‘புறநானூறு’ படம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சுதா கொங்காரா இயக்கும் இந்தப் படத்தினை ஆகாஷ் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தினை தயாரிக்க புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றிணையும் தொடங்கியிருக்கிறார். இவர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via: