’ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ரியோ, மாளவிகா, பாவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோ’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஹரிஹரன் ராம். ’ஜோ’ படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஹரிஹரன் ராம் தனது அடுத்தப் படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார். இதில் நாயகனாக நடிக்க பிரதீப் ரங்கநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அவருக்கும் கதை பிடித்துவிடவே, திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் ஹரிஹரன் ராம்.
முழுத் திரைக்கதை வடிவத்தையும் கேட்டப் பிறகே, இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
Tags: Pradeep Ranganathan