பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக மமிதா பைஜு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தன.
தற்போது, பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் கதையினை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட உள்ளார்.
இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கினாலும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தான் இந்தப் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.