பொன்ராம் இயக்கத்தில் கவின்?

கவினை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்ற ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். அதற்குப் பிறகு இவர் இயக்கிய ‘சீமராஜா’ மற்றும் ‘டிஎஸ்பி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை.

இதனால், அடுத்து வெற்றிப் படமொன்றை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் பொன்ராம். தற்போது அந்தக் கதையினை கவினை சந்தித்துக் கூறியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்திருக்கிறது.

விரைவில் தயாரிப்பாளர் யார், எப்போது படப்பிடிப்பு என்பதெல்லாம் முடிவாகி, அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. பொன்ராம் கதையினை வைத்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் கவின்.

Read Previous

ப்ரொமோஷன் பணிகளை துவக்கிய “இந்தியன் 2” டீம்

Read Next

திரையுலகிலிருந்து விலக கங்கணா முடிவு

Most Popular