லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணி ரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், ஜெயராம், ஷோபிதா துலிபலா, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, அஷ்வின், சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ்ராஜ், லால், கிஷோர், நாசர், விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
தமிழில் சூர்யா, ஹிந்தியில் அமிதாப்பச்சன், தெலுங்கில் மகேஷ்பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் இந்த டீசரை வெளியிடுகிறார்கள்.
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாகத் தயாராகி இருக்கும் இப்படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகிறது.
ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக த்ரிஷா ஆகியோரது கதாபாத்திரங்கள் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இன்று அருள்மொழிவர்மன் ஆக நடிக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.