தமிழ் சினிமாவில் அடிக்கடி யாராவது ஒரு நடிகருக்கும், நடிகைக்கும் இடையே காதல் என கிசுகிசு வரும். அதற்கேற்றால் போல் சீக்கிரமே அவர்கள் தாங்கள் காதலிக்கிறோம் என தங்கள் காதல் கதைகளைச் சொல்வார்கள்.
ஆனால், ஒரு படத்தின் விளம்பரத்திற்காக காதல் என்ற அற்புதமான உணர்வை கேலிக்கூத்தாக்கி ஒரு படத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை.
ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து தெலுங்குப் படமான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்கள்.
அதற்காக பிரியாவை தான் காதலிப்பது போல ஹரிஷ் கல்யாண் டிவிட்டரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பிரியாவும் அதற்குள் என்ன அவசரம் என்று பதிலளித்துள்ளார்.
இருவரது கமெண்ட் பகுதியையும் யாரும் கமெண்ட் பதிவிடாதவாறு லாக் செய்துள்ளார்கள்.
ஒரு கொலை பற்றிய படம் எடுத்தால் யாரையாவது கொலை செய்துவிட்டோம் என்று சொல்லி, அந்த புகைப்படத்தை வெளியிட்டு விளம்பரப்படுத்துவார்கள் போலிருக்கிறது.
விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா ?