இளையராஜாவுக்கு பார்த்திபனின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து…..

வணக்கம் இசையே !
 
இந்த ஊரடங்கில் சற்றேனும் உள்ளடங்கிக் கிடக்க உங்கள் இசையை என் உள்ளக்கிடக்கில் பாய்ச்சி பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றென் கிழக்கில் உங்கள் இசையே செந்நிறம் பாய்ச்சி பரவி விடிந்தது.

“இதயம் போகுதே” …. பாடலின் இசைக் கோர்வைகளைப் பற்றி விவரித்த போது,

1822-ல் SCHUBERT என்ற composer-ன் Notations-ஐ 1865-ல் பதிவு செய்ததை…அதே feeling-ல் தாங்கள் புதிய வார்ப்புகளாக்கிய விதம் கேட்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

மெய்!
நீங்கள் வரம்…
தவமும் நீங்களே!
(அந்த அருகதைக் கூட எங்களுக்கில்லை.)
ஐம்பூதங்களில் ஒன்றான காற்றினை
ஐயா தங்களின் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றினை
ஐயா தங்களின் இசையால் சுத்திகரித்து 
எங்கள் வாழ்க்கையில் வார்த்தையில் சுருங்கா… உணர்வாய் ஆனவருக்கு என்னைத் தெரியும் என்பதே என் ஆணவம் !
(ஏதோ தோன்றியதைக் கொட்டிவிட்டேன்),”

எனக் குறிப்பிட்டிருக்கிறார் பார்த்திபன்.

Read Previous

சந்திரமுகி 2 நடிக்கவில்லை, சிம்ரன் தகவல்

Read Next

இசைக்கு ஒரு வாழ்த்துப்பா – இயக்குனர் சீனு ராமசாமி

Most Popular