பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சந்திரமுகி’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் பி. வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ளது. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவுக்குப் பதிலாக இரண்டாம் பாகத்தில் சிம்ரன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.
அப்படிப்பட்ட செய்திகளுக்கு சிம்ரன் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில், ““இது ஒரு பொய்யான செய்தி. எனது ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை, இப்படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிப்பதற்காக என்னை யாரும் அணுகவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.