சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலரது நடிப்பில், அனிருத் இசையமைப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘வேலைக்காரன்’.
திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளது. இந்தத் தகவல் வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியைப் பற்றி இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில்,
”நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்தப் படத்திற்கு தான் மிகப் பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது தியேட்டர்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது . சமுதாய அக்கறை கொண்ட நல்ல படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்துக் கொண்டாடுவார்கள் என்பது மறுபடியும் இப்படம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
குடும்பங்களோடு திரையரங்கத்திற்கு மக்கள் வந்து இப்படத்தை ரசிப்பது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சமுதாய அக்கறை உள்ள கதையை சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் எனக்கு பெரும் திருப்தி,” என்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.