ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆவேசமாகக் குரல் கொடுத்து மீடியாக்களின் பார்வையில் பிரபலம் ஆனவர் ஜுலி.
அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் இன்னும் அதிகம் பிரபலம் ஆனார்.
அவரை வைத்து பல மீம்ஸ்கள் வந்து அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்தவரையில் அவரை பரபரப்பாக்கியது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிவடைந்த பின் கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆக மாறினார்.
இப்போது, K 7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் ஜுலி.
இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
திரையுலக அறிமுகம் பற்றி ஜுலி கூறுகையில்,
“இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. இந்த படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” என்றார்.
இப்படத்தின் தலைப்பு, இயக்குனர் ஆகிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.