‘ஜுங்கா’ டைட்டில் டீசர், ரசிகர்கள் அமோக வரவேற்பு

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’.

இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘வனமகன்’ நாயகி சயீஷா சைகல் நடிக்கிறார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல்.

இப்படத்தின் டைட்டில் டீசர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் வெளியிடப்பட்டது.

டைட்டில் டீசர் பற்றி இயக்குநர் கோகுல் கூறியதாவது, “படத்தின் டைட்டிலுக்காக டீஸர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா ’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலகப் பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீஸரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று நினைக்கிறோம்,’’ என்றார்.

இந்த டைட்டில் டீஸர் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read Previous

கீர்த்தி சுரேஷின் ‘பிரதர்’ விக்னேஷ் சிவன்

Read Next

மாதவன், சற்குணம் இணையும் படத்தில் ஹாலிவுட் கலைஞர்