தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான திரைப்பட நிறுவனமான விளங்கி வரும் நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். இந்நிறுவனம் ஒரே நாளில் நான்கு திரைப்பட விழாக்களை நடத்தி வியக்க வைத்துள்ளது.
இந்நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளிவந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா, மற்றும் இந்நிறுவனம் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, ‘பாகமதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சார்பு நிறுவனமான ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா ஆகியவை விமரிசையாக நடைபெற்றன.
‘ஸ்டுடியோ க்ரீன் மெகா ஈவன்ட்’ என டிவிட்டரிலும் டிரென்டிங் ஆகும் அளவிற்கு அந்த விழா பற்றியே அன்று பேச்சு இருந்தது.
தமிழ்த் திரையுலகத்தில் இப்படி ஒரே நாளில் இத்தனை படங்களின் விழாக்கள் ஒரே மேடையில் இதுவரை நடைபெற்றதில்லை. நான்கு படங்களின் நட்சத்திரங்களும் விழாவிற்கு வந்து அவர்களது படங்களைப் பற்றிப் பேசி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிகழ்ச்சி நடந்த விழா அரங்கில் நட்சத்திரக் கூட்டமாக இருந்தது. ஒரு படத்தின் ஹீரோ மற்ற ஹீரோ நிகழ்வில் கலந்து கொண்டதும், இசையை வெளியிட்டு பாராட்டிப் பேசியதும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தது போன்ற பிரமிப்பு அன்று நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இருந்தது.