பிகில் – இரு வேடங்களில் விஜய் ?

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.

அட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.

முதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.

இரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

Read Previous

தமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…

Read Next

பிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்