‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்க இருப்பதாக விளம்பரங்கள் கூட வந்த நிலையில் தற்போது விஜய் , இயக்குனர் விஜய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘தாண்டவம் ’ படத்தை முடித்துவிட்ட இயக்குனர் விஜய்யும் விஜய் படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் – இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவையும் செய்யப் போகிறார்கள்.
இப்படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக மும்பையிலிருந்து பிரபலமான நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது.
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் இருக்கலாம்.