மீண்டும் அமலா…

    1980களில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர்களில் அமலாவும் ஒருவர். டி.ராஜேந்தரால் 1986ம் ஆண்டு வெளிவந்த ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் அறிமுகமானவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, மோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் 1991ல் வெளிவந்த கற்பூர முல்லை. தெலுங்கு திரையுலகிற்கும் சென்று அங்கும் பல வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்தார்.

தெலுங்கின் முன்னணி கதாநாயகனான நாகார்ஜுனாவை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது, ஏறக்குறைய 20 வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘Life Is Beautiful ‘ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த படத்திற்காக இயக்குனர் சேகர் கம்முலா ஒரு தயக்கத்துடனேயே அமலாவை அணுகியிருக்கிறார்.படத்தின் கதையும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் அமலாவும் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தில்  ஸ்ரேயாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமலாவை, விரைவில் தமிழ்ப் படத்திலும் எதிர்பார்க்கலாமா ?

 

Read Previous

இன்றைய ரிலீஸ்

Read Next

‘மெரினா’ – மீண்டும் பிரச்சனை…

Most Popular