‘மைனா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் , நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுக நாயகனாகவும், சுந்தரபாண்டியன் படத்தில் நாயகியாக நடித்த லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ‘கும்கி’.
தற்போது இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ‘கும்கி’ படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.
நல்ல திரைப்படங்களை இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட வேண்டுமென்ற எங்களது ஆவலின் வெளிப்பாடே இப்படத்தை நாங்கள் வாங்கக் காரணமாக அமைந்தது என்கிறார் ஸ்டுடியோ க்ரீன் – தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா.
விரைவில் வெளிவர உள்ள இப்படத்தில் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு – எம். சுகுமார். படத்தொகுப்பு – எல்.வி.கே. தாஸ், பாடல்கள் – யுகபாரதி.
பட வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.