2010ல் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், சிவா நடிப்பில் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ‘சுடிகாடு’ என்ற பெயரில் அல்லரி நரேஷ், மோனல் கஜ்ஜார் நடிக்க, கடந்த மாதம் 24ம் தேதியன்று வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
‘சுடிகாடு’ இது வரை ஏறக்குறைய 15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெலுங்கு திரையுலகில் சொல்லப்படுகிறது.
இப்படி ஒரு வெற்றிப்படத்தை , சமீப காலமாக தமிழ்ப்படங்களை அதிகமாக ரீமேக் செய்து சர்வ சாதாரணமாக 100 கோடி, 150 கோடி என வசூலிக்கும் ஹிந்தித் திரையுலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ?
விரைவில், தமிழ்ப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக விளங்கும் சுரேஷ்பாபு இந்த படத்தை இந்தியில் தயாரிக்க இருக்கிறார். ஜெனிலியாவின் கணவரான ரிதேஷ் தேஷ்முக், நாயகனாக நடிக்க இருக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
தமிழ்ப்படம், இப்போது இந்திய அளவில் பேசப்படும் படமாக மாறி விட்டது.