2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம் ஒரு வித்தியாசமான படமாக அமைந்து வெற்றி பெற்றது. சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இப்படம் அனைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற படமாக விளங்கியது.
இதன் பின் வடிவேலு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. சமீப காலமாக அவரும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இந்தத நிலையில் இயக்குனர் சிம்புதேவன் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் ஒரு நல்ல படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க நினைக்கும் வடிவேலுவுக்கும் இப்படம் நல்ல படமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தை ஆரம்பமாகி நடந்து வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.