இவன் வேற மாதிரி….

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘எங்கேயும்எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘கும்கி’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு ‘இவன் வேற மாதிரி’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஆரம்பமானது. இயக்குனர் சரவணனுக்கும் நடிகர் விக்ரம் பிரபுவுக்கும் இந்த படம் அவர்களின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் நல்ல இயக்குனராக சரவணன் அறியப்பட்டார். விக்ரம் பிரபுவின் முதல் படமான ‘கும்கி’ வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கிறது. பட வெளியீட்டிற்கு முன்பே அவருக்கு இந்த படம் நல்ல அறிமுகமாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

‘இவன் வேற மாதிரி’, இவர்கள் வேற மாதிரி என நிரூபிக்கும் படமாக அமைய வாழ்த்துவோம்…

 

Read Previous

டிசம்பரில் ‘NEP’

Read Next

புது கூட்டணியில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’