புது கூட்டணியில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’

     து இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் மாறி மாறி கூட்டணி அமைக்கும் காலம் போலும். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கூட்டணியாக இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி பிரிவதும் சேர்வதுமாக இருக்கிறார்கள்.

அந்த விதத்தில் தற்போது புதிதாக சேர்ந்துள்ளது இயக்குனர் ராஜேஷ்  மற்றும் இசையமைப்பாளர் தமன் கூட்டணி . இயக்குனர் ராஜேஷ் , கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில்தான் இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.

ராஜேஷ் முதலில் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’, அடுத்து இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரு படங்களுக்கும் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்தார். மூன்றாவதாக இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் விருப்பத்திற்கிணங்க ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்தார். மூன்று படங்களின் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

அடுத்ததாக ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திற்கு யாரை இசையமைப்பாளராக போடுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் புதியதாக இசையமைப்பாளர் தமனுடன் இணைந்திருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் படத்துக்கு படம் கூட்டணி மாறி வரும் காலம் இது…

Read Previous

இவன் வேற மாதிரி….

Read Next

பாகன் பட இயக்குநரின் அடுத்த படம் ‘முஸ்தபா’

Most Popular