‘பவர் ஸ்டார்’, சாம் ஆன்டர்சன்..அடுத்து யாரோ ?

     தமிழ்த் திரையுலகில் தற்போது ஒரு புதிய ட்ரென்ட் உருவாகி வருகிறது. இன்றைய இளைஞர்கள் ‘வித்தியாசமாகப்’ பார்க்கும் சில நட்சத்திரங்களை படங்களில் நடிக்க வைப்பதே அது.

‘பவர் ஸ்டார்’  சீனிவாசன் தற்போது சந்தானத்துடன் ‘கண்ணா லட்டுத் தின்ன’ ஆசையா படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்து ‘யூ டியுப்’ புகழ் ‘யாருக்கு யாரோ’ படத்தின் நாயகன் ‘சாம் ஆன்டர்சன்’ வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’ படத்தில் நடிக்கப் போவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வந்த நிலையில் மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சொன்னா புரியாது’ படத்தில் சாம் ஆன்டர்சன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் செய்தி வெளியானது.

சீரியசாகவே இப்படி செய்கிறார்களா அல்லது எப்படியாவது தங்களது படங்களுக்கு எளிதில் விளம்பரம் கிடைக்க இப்படி செய்கிறார்களா என உண்மையான சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்வது நம் காதில் விழாமல் இல்லை.

அடுத்து யாரோ ?

 

 

Read Previous

50ஐத் தொட்ட ‘சுந்தர பாண்டியன்’

Read Next

‘துப்பாக்கி’ 9ம் தேதி ரிலீஸ்…