‘யாருடா மகேஷ்’ கல கல காதல் படம்…

        மீபகாலமாக புதிய  இயக்குனர்களின் வித்தியாசமான படைப்புகள் தமிழ்த் திரை உலகில் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. நகைச்சுவை கலந்த காதல் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன.

இந்த வரிசையில் இப்போது புதிய இயக்குனர் மதன்குமார் இயக்கத்தில் Red Studios மற்றும் Colour Frames நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ‘யாருடா  மகேஷ்’ என்ற படம் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது.

“ இப்போது திரையுலகில் புது வெள்ளம் போல புதிய இயக்குனர்களின் வித்தியாசமான படைப்புகள் வெற்றி பெற்று  வருகின்றன. அந்த நம்பிக்கையில் இந்த படத்தை நகைச்சுவை கலந்த காதல் படமாக இந்தக் கால இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் எடுத்து உள்ளளோம்” என்கிறார் இயக்குனர் மதன் குமார்.

புது முகம் சந்தீப், டிம்பிள்,  நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.  ஜெகன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து, நெல்லை சிவா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கோபி சுந்தர் இசை அமைக்க, நா.முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார். ராணா ஒளிப்பதிவு செய்ய, வனராஜ் அரங்கம் அமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கயுள்ளார் புது முக இயக்குனர் மதன் குமார். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அந்தோணி, நவாஸ், சத்யா நாராயணன் மற்றும், மதன் குமார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா டிசம்பர் 5 ஆம் தேதி நடைபேற உள்ளது.

Read Previous

சிவாஜி 3D – டிரைலர் முன்னோட்ட விழா

Read Next

நீர்ப்பறவை – விமர்சனம்

Most Popular