ஏவி.எம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிவாஜி’.
தற்போது 3 D முறையில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிவாஜி’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று வெளியாக உள்ளது.
இதன் டிரைலர் வெளியீடு டிசம்பர் 3ம் தேதியன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. அது மட்டுமல்ல, 4 பாடல்களும் அன்று திரையிடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் ‘DOLBY ATMOS’ என்ற புதிய ஒலி அமைப்பில் திரையிடப்பட உள்ளது. இந்தியாவிலேயே சத்யம் திரையரங்கில்தான் இம் முறை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேகமாக இப்படத்தின் டிரைலரும், ஒரு பாடல் காட்சியும் திரையிடப்பட்டது. அப்போதே பத்திரிகையாளர்கள் 3 D முறையில் பார்த்து ரசித்ததை ஆச்சரியம் கலந்த செய்தியாக வெளியிட்டனர்.
ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ‘3 D’ ‘சிவாஜி’ , கண்டிப்பாக ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.