அஜித் ஜோடியாக தமன்னா

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  திரு வெங்கட்ராம ரெட்டி வழங்க புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது. ‘சிறுத்தை’ சிவா இந்த படத்தை இயக்குகிறார். அஜீத் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா  அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் . இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. .

தன்னை அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறும் இயக்குனர் சிவா, ” படத்தின் கதாநாயகி தேடல் முடிவடைந்து உள்ளது. தமன்னா நாயகியாக நடிக்கிறார்.

தயாரிப்பாளர்கள் தங்கள் நிறுவனத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக எடுக்க வேண்டும் என்ற  எண்ணத்தோடு இப்படத்தில் பல கதாபாத்திரங்கள் உடைய கதையை தேர்ந்து எடுத்து உள்ளனர்.

விதார்த் , பாலா , முனீஷ் , சோஹில் , என்று இளம் நாயகர்கள் சிலர் அஜீத் சாரோடு இணைந்து நடிக்க உள்ளனர் .

ஜெயராம் சாரும்,  சந்தானமும் இப்படத்தின் நகைச்சுவைக்கு உத்தரவாதம் .  J P , இளவரசு என்று குணசித்திர  நடிகர்களும் நடிக்க இந்த படம் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப  ஒரு ஜனரஞ்சகமான படமாக இருப்பதோடு அஜீத் சாரின் ரசிகர்களின்  ரசனைக்கேற்ப இருக்கும் என நம்புகிறேன்” என்றார் .

நான் கதை விவாதத்திற்காக ஒவ்வொரு தடைவையும் அஜித் சாரை சந்திக்க போகும் போது, அவரைப் பார்த்து பிரமிப்பு அடைவதுண்டு , அவருடைய ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும்  என்ற பொறுப்பும் அதிகமாகிறது .என்னோடு ஒளிப்பதிவாளர் வெற்றியும்  கலை இயக்குனர் பிரபாகரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

தேவி ஸ்ரீ  பிரசாத்துடன்  இணைந்து  வழங்கும்  இசை  அஜீத் ரசிகர்களுக்கு  நிச்சயம் விருந்தாகும் . மறைந்த திரு நாகி ரெட்டி அவர்களின் நூற்றாண்டு  வருடத்தில் இப்படத்தை இயக்க வாய்ப்பு  கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்று கூறுவேன் .

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் என்றாலும் , பாடல் பதிவு வருகின்ற டிசம்பர்  2 ஆம் தேதி திரு. நாகி ரெட்டி அவர்களின்  நூற்றாண்டு நிறைவு நாளில் நடக்க உள்ளது ,” என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

Read Previous

ராகவா லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸீ

Read Next

தனுஷ் ஜோடியாக சமந்தா ?