ராகவலா லாரன்ஸ் அடுத்து இயக்க இருக்கும் ‘முனி-3’ படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸீ நடிக்க இருக்கிறார்.
முனி, முனி – 2 (காஞ்சனா) ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கவிருக்கிறார் ராகவ லாரன்ஸ். டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாப்ஸீ தற்போது தமிழில், அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும், ஆதி ஜோடியாக ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
முனி – 3 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படமாகும் எனத் தெரிகிறது. இது பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம்.