தனுஷுக்கு எப்போதுமே ‘கன்னி ராசி’ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகும். இது வரை பல முன்னணி நடிகைகளுடன் அதிகமாகவே நடித்து வருகிறார். ஸ்ருதி, ரிச்சா, தமன்னா, ஹன்சிகா, டாப்ஸீ, ஜெனிலியா, ஸ்ரேயா, நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சினேகா, ப்ரியா மணி என நீண்ட வரிசை இது. இந்த வரிசையில் புதிதாக சேர இருப்பவர் சமந்தா.
‘வாகை சூடவா’ படத்திற்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் ‘சொட்டவாளக்குட்டி’. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் இது. இப்படத்திற்காக ஹீரோயின் தேடல் கடந்த பல நாட்களாக நடந்து வந்தது.
தற்போது சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கலாம் எனத் தெரிகிறது. கதையைக் கேட்ட சமந்தா மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் எனத் தகவல்.
விரைவில் ஒரு புது ஜோடியை எதிர்பார்க்கலாம் இப்படத்தின் மூலமாக.