ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ 18 ஆகஸ்ட் 1975ம் ஆண்டு வெளியானது.

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே. பாலசந்தர் தொடர்ந்து, மூன்று முடிச்சு, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு ஆகிய படங்களில் ரஜினிகாந்தை நடிக்க வைத்தார். இவர்கள் இருவரும் இணைந்து பணி புரிந்து 31 வருடங்கள் ஆகி விட்டன.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘பைரவி’ 02.06.1978 அன்று வெளியானது. இயக்கம் – எம்.பாஸ்கர், இசை – இளையராஜா, நாயகி – ஸ்ரீபிரியா, தயாரிப்பு – கலைஞானம்.
ரஜினிகாந்த் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘பில்லா’ 1980ம் ஆண்டு வெளியானது. இயக்கம் – கிருஷ்ணமூர்த்தி, இசை – எம்.எஸ்.விஸ்வநாதன், நாயகி – ஸ்ரீபிரியா.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த படங்கள் – அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தப்புத் தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும்.
ரஜினிகாந்த் – ஸ்ரீபிரியா இணைந்து நடித்த படங்கள் – மாங்குடி மைனர், பைரவி, தாய்மீது சத்தியம், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், அன்னை ஓர் ஆலயம், அலாவுதீனும் அற்புத விளக்கும், பொல்லாதவன், பில்லா, தீ, தனிக்காட்டு ராஜா.

ரஜினிகாந்த் – ஸ்ரீதேவி இணைந்து நடித்த படங்கள் – 16 வயதினிலே, ப்ரியா, தாயில்லாமல் நானில்லை, தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை.
ரஜினிகாந்த் – சிவாஜி கணேசன் இணைந்து நடித்த படங்கள் – ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன், படிக்காதவன், விடுதலை, படையப்பா.
ரஜினிகாந்த் – பிரபு இணைந்து நடித்த படங்கள் – தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், மன்னன், சந்திரமுகி.
ரஜினிகாந்த் – மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இணைந்து நடித்த படம் – தளபதி
ரஜினிகாந்த் – இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்த படங்கள் – அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, ஆறு புஷ்பங்கள், ஜஸ்டிஸ் கோபிநாத், நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா, பொல்லாதவன், பில்லா, ராணுவ வீரன், தீ, தில்லு முல்லு, போக்கிரி ராஜா, சிவப்பு சூரியன்.

ரஜினிகாந்த் – இசையமைப்பாளர் இளையராஜா இணைந்த படங்கள் – புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ப்ரியா, பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், நான் வாழவைப்பேன், தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக் காளை, நான் போட்ட சவால், காளி, ஜானி, எல்லாம் உன் கைராசி, அன்புக்கு நான் அடிமை, நெற்றிக் கண், கர்ஜனை, கழுகு, புதுக்கவிதை, தனிக்காட்டு ராஜா, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, தங்க மகன், அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், தம்பிக்கு எந்த ஊரு, கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், ஸ்ரீ ராகவேந்திரர், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத், மாவீரன், வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, பணக்காரன், அதிசய பிறவி, தளபதி, தர்மதுரை, மன்னன், பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வீரா.
ரஜினிகாந்த் நடித்த தொடர்ச்சியான 10 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
ரஜினிகாந்த் நடித்த அதிக படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜாவே.
ரஜினிகாந்த் நடித்த 50வது படம் ‘ரங்கா’. 100வது படம் ‘ஸ்ரீராகவேந்திரர்’. 150வது படம் ‘படையப்பா’.
ரஜினிகாந்த் – ஏ.ஆர். ரகுமான் இணைந்த படங்கள் – படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன்.

ரஜினிகாந்த் – இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இணைந்த படங்கள் – புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக் காளை, ராணுவ வீரன், நெற்றிக் கண், கழுகு, போக்கிரி ராஜா, புதுக் கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரர், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன்.
ரஜினிகாந்த் – பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்த படங்கள் – சிவாஜி, எந்திரன்
ரஜினிகாந்த் – இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இணைந்த படங்கள் – முத்து, படையப்பா.
ரஜினிகாந்தை, ஜானி, முள்ளும் மலரும் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தவர் இயக்குனர் மகேந்திரன்.
ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த மற்ற நாயகிகள் – ஸ்ரீவித்யா, சுமித்ரா, சரிதா, ஜெயசித்ரா, ஜெயப்பிரதா, ‘படாபட்’ ஜெயலட்சுமி, ரதி, லட்சுமி, ரீனா, சீமா, மாதவி, ராதிகா, ஜோதி, அம்பிகா, ராதா, அனிதா ராஜ், சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், சுலக்ஷணா, ரேவதி, அமலா, ரூபிணி, குஷ்பு, கௌதமி, சீதா, நதியா, ஷோபனா, கனகா, ஷீபா, ஜுஹி சாவ்லா, பானுப்ரியா, விஜயசாந்தி, மீனா, ரோஜா, நக்மா, ரம்பா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ராலா, ஜோதிகா, ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய்.
ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த மற்ற முக்கிய நாயகர்கள் – சிவகுமார், சரத்பாபு, விஜயகுமார், கார்த்திக், பாக்யராஜ், சிரஞ்சீவி, சத்யராஜ், மோகன்பாபு, வி. ரவிச்சந்திரன்.

ரஜினிகாந்த் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படம் கருப்பு வெள்ளை. அவர் முதலில் நடித்த கலர் படம் – 16 வயதினிலே, தமிழின் முதல் 70எம்எம் படமான ‘மாவீரன்’ ரஜினிகாந்த் நடித்ததுதான். தற்போது 2டியில் இருந்து 3டிக்கு மாற்றுப்பட்டு வந்துள்ள படம் ‘சிவாஜி 3D’ . இப்போது நடித்தும் கொண்டிருக்கும் ‘கோச்சடையான்’ ஒரு அனிமேஷன் படம்.
ரஜினிகாந்துடன் நடித்துள்ள முக்கிய நகைச்சுவை நடிகர்கள் – நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, கருணாஸ், சந்தானம் .
ரஜினிகாந்த் நடித்த ஹிந்திப் படங்களின் எண்ணிக்கை 23, தெலுங்கப் படங்கள் 14, கன்னடம் 9, மலையாளம் 1 , பெங்காலி 1.
ரஜினிகாந்த் நடித்த ஆங்கிலப் படம் ‘பிளட் ஸ்டோன்’ 7.10.1998 அன்று வெளியாகியது.
ரஜினிகாந்த் நடித்து அவருடைய பிறந்த நாளில் வெளியாகும் படம் ‘சிவாஜி 3D’ .