‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர். பிரபாகரன் அடுத்து உதயநிதி – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.
பெரிய ஹீரோக்களுடன் நடித்து வந்த நயன்தாரா வளர்ந்து வரும் ஹீரோவான உதயநிதி நடிக்கும் படத்தில் நடிப்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏற்கெனவே உதயநிதி தயாரித்த ஆதவன் படத்தில் நாயகியாக நடித்தார்.
அது மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப்படமாக உதயநிதி ஹீரோவாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ அமைந்தது.
இந்த புதிய ஜோடியின் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது என இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.