4ம் தேதி 4 படங்கள்

jan 4th release

ன்றைய நிலவரப்படி வரும் 4ம் தேதி 4 படங்கள் வெளியாக இருக்கின்றன.

பொங்கலுக்கு பெரிய படங்கள் வர உள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த நான்கு படங்களும் வெளியாகின்றன. அனைத்துமே சிறு முதலீட்டுப் படங்கள்தான். இருந்தாலும் வெற்றி பெற்று விட்டால் அவைதான் பெரிய படங்கள்.

அவை, நண்பர்கள் கவனத்திற்கு, குறும்புக்காரப் பசங்க, கள்ளத் துப்பாக்கி, மயில் பாறை.

‘நண்பர்கள் கவனத்திற்கு, குறும்புக்காரப் பசங்க’ இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்திருப்பவர் சஞ்சீவ். இவர் ‘குளிர் 180° ’ படத்தில் நாயகனாக நடித்தவர்.

‘கள்ளத்துப்பாக்கி’ படம் டைட்டில் பிரச்சனையால் ‘துப்பாக்கி’ படத்துடன் மோதியவர்கள். சில வாரங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம். இரண்டு வாரங்கள் தள்ளி வெளியாகிறது.

‘மயில் பாறை ’ படத்தை “இந்த வருட முதல்லவர சூப்பர்ஹிட் பாட்டு, காமெடி எங்க படமாதான் இருக்கும்” னு விளம்பரப்படுத்தியிருக்காங்க.

Read Previous

புதுமுகங்கள் தேவை – விமர்சனம்

Read Next

ஷாரூக்கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பரபரப்பு….

Most Popular