நடிகரான இயக்குனர் ராஜகுமாரன்

   rajakumaran_00016 பார்த்திபன், தேவயானி , அஜித் நடித்த ‘நீ வருவாய் என’, படத்தின் மூலம் இயக்குனரானவர் ராஜகுமாரன்.

அடுத்து சரத்குமார், விக்ரம், குஷ்பு, தேவயானி நடித்த ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தையும், முரளி, அப்பாஸ் , தேவயானி நடித்த ‘காதலுடன்’ திரைப்படத்தையும் இயக்கினார்.

அடுத்து, தற்போது, அவரே தயாரித்து, இயக்கி, ஹீரோவாகவும் அறிமுகமாகும் படம் ‘ திருமதி தமிழ்’.

தொடர்ந்து 3 படங்களிலும் தேவயானியை நாயகியாக நடிக்க வைத்தவர் இந்த படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். தேவயானியை காதலித்து மணம் முடித்தவர் ராஜகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தேவயானி தவிர, கீர்த்தி சாவ்லா மற்றும் 25க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

விரைவில் திரைக்கு வர இருக்கின்றது ‘திருமதி தமிழ்’.

‘திருமதி தமிழ்’ படத்தில் ராஜகுமாரன் – புகைப்படங்கள்

‘திருமதி தமிழ்’ படத்தில் தேவயானி – புதிய புகைப்படங்கள்

‘திருமதி தமிழ்’ படத்தில் தேவயானி – புகைப்படங்கள்

‘திருமதி தமிழ்’ – புகைப்பட கேலரி

 

 

Read Previous

ஷாரூக்கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பரபரப்பு….

Read Next

பரபரப்பான படப்பிடிப்பில் ‘யான்’