‘ஜெயம்’ ரவி , த்ரிஷா நடிக்க கல்யாணகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘பூலோகம்’.
வட சென்னையை மையப்படுத்திய ஒரு குத்துச் சண்டை வீரனின் கதை இந்த படம். குத்துச் சண்டை வீரன் பூலோகமாக ஜெயம் ரவி நடிக்கிறார்.
இந்த படத்தில் பிரபல அமெரிக்க நடிகர் ‘நாதன் ஜோன்ஸ் ’ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஒரு முன்னாள் குத்துச் சண்டை வீரர். ஏழு அடி உயரம் கொண்ட அசத்தலான தோற்றத்தில் உள்ளவர்.
2004ல் வெளிவந்த ஹாலிவுட் படமான ‘டிராய்’ படத்தில் ‘போக்ரியஸ்’ கதாபாத்திரத்தில் நடித்தவர்.
இவருக்கும், ஜெயம் ரவிக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் இதுவரை பார்க்காத, கேட்காத, அனுபவிக்காத மிகப் பெரிய அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன்.