ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் , சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் .‘அலெக்ஸ் பாண்டியன்’.
இப் படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘ U ‘ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் வெளியாகிறது.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்தி – சந்தானம் காம்பினேஷன் இந்த படத்திலும் நகைச்சுவையில் கலக்க இருக்கிறார்கள்.
அனுஷ்காவைத் தவிர, மேலும் சந்தானத்தின் தங்கைகளாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
அசத்தலான ஆக்ஷன் படம்தான் என்றாலும், காதல், நகைச்சுவை கலந்து அனைவரையும் ரசிக்க வைக்கக் காத்திருக்கிறார் ‘அலெக்ஸ் பாண்டியன்’.