பொங்கலுக்கு மேலும் ஒரு படம்

   puthagam இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளிவர இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படம் இந்த போட்டியில் குதித்துள்ளது.

அந்த படம் ‘புத்தகம்’. பிரபல டிவி நடிகரான விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ள படம். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, சுரேஷ், ரச்சனா மௌரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி விஸ்வரூபம், 12ம் தேதி அலெக்ஸ்பாண்டியன், 13ம் தேதி கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர், 14ம் தேதி புத்தகம் ஆகிய படங்கள் வெளி வர உள்ளன.

பெரிய நட்சத்திரங்களின் படங்களுடன் இந்த  படமும் இப்போது போட்டி போட உள்ளது.

Read Previous

அந்தமானில் ‘எதிர் நீச்சல்’

Read Next

தமிழ் திரையுலக உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த் – செய்தி